• திராட்சை சாற்றை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் நன்றாக ஊறவைத்து முகத்தை கழுவினால் சருமமானது எப்பொழுதும் ஈரப்பதத்துடன் காணப்படும். மேலும் தினமும் இதை தொடர்ந்து செய்து வந்தால் சரும வறட்சி ஏற்படுவதை தடுக்கலாம்.
  • பாதாம் பருப்பில் உள்ள சத்துக்களானது பெண்களுக்கு குழந்தை பிறப்பில் ஏற்படும் குறைபாட்டை நீக்க உதவுகிறது. மேலும் இது பெண்களின் லிபிடோ சக்தியை ஊக்குவிக்க உதவுகிறது.
  • பெண்களீன் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்க சோயா பீன்ஸ் உதவுகிறது. இதில் உயர்தர புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
  • அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரையுடன் சேர்த்து தினமும் இருமுறை பாலுடன் கலந்து குடித்து வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
  • குழந்தை பெற்ற பெண்கள் வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் நன்றாக வதக்கி பின்பு அதனுடன் கருப்பட்டி கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்பால் நன்றாக சுரக்கும்.
  • முகம் பளிச்சிட பச்சை பயிறு மாவுடன், தேன் மற்றும் பன்னீர் சேர்த்து கலந்து முகத்தில் போட்டு, அரை மணி நேரம் ஊறவைத்து முகம் கழுவினால் முகம் நன்றாக பளிச்சிடும்.
  • சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் நன்றாக வதக்கி மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து தினசரி காலை மாலை என இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.
  • காதில் கம்மல் போடும் இடத்தில் புண் இருந்தால் கடுக்காய் மற்றும் மஞ்சள் இரண்டையும் நன்றாக அரைத்து புண் உள்ள இடத்தில் பூசி வந்தால் விரைவில் புண் குணமாகும்.
  • தயிரை தலைக்குத் தேய்த்து நன்றாக ஊறவைத்து பின்னர் சிறிது நேரம் கழித்து சீயக்காய் தூள் போட்டுக் குளித்தால் முடி உதிர்வது குறையும். இதை தொடர்ந்து செய்து வந்தால் முடி உதிர்வதை முற்றிலும் நிறுத்தலாம்.
  • பால் கொடுக்கும் தாய்மார்கள் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க பப்பாளிக்காயைக் கூட்டு செய்து சாப்பிடலாம்.
  • இரவில் தூங்கும் போது செம்பருத்திப் பூக்களைத் தலையில் வைத்து படுத்து காலையில் எடுத்தால் மூளை மற்றும் கண்களுக்கும் குளிர்ச்சி ஏற்படும். மேலும் பேன் மற்றும் பொடுகு தொல்லை அகலும்.
  • கரப்பான் புண்கள் இருந்தால் மஞ்சள் மற்றும் வேப்பிலை இரண்டையும் நன்றாக அரைத்து பூசி வந்தால் புண் விரைவில் ஆறி விடும்.
  • பல்வலி உள்ளவர்கள் கருஞ்சீரகத்தை நீரில் ஊற வைத்து அந்த நீரை கொண்டு வாய் கொப்பளித்தால் பல்வலி நீங்கும்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை info@tamilnalam.in என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…