Tasty Semiya Kesari Recipe

தேவையான பொருட்கள்

  • சேமியா – 1 கப்
  • தண்ணீர் – 2 கப்
  • சர்க்கரை – அரை கப்
  • நெய் – 4 டீஸ்பூன்
  • முந்திரிப்பருப்பு – சிறிதளவு
  • கிஸ்மஸ் பழம் – சிறிதளவு
  • ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
  • குங்குமப்பூ – 1 சிட்டிகை
  • கேசரி பவுடர் – 1 சிட்டிகை

சுவையான செட்டிநாடு சிக்கன் குழம்பு

செட்டிநாடு ஸ்டைல் வஞ்சிரம் மீன் குழம்பு

செய்முறை

  1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் சேமியாவை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின்னர் அதே கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் முந்திரி மற்றும் கிஸ்மஸ் பழத்தை போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
  3. பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும் அதில் வறுத்து வைத்துள்ள சேமியாவை போட்டு வேகவைக்க வேண்டும்.
  4. சேமியா நன்றாக வெந்ததும் அதில் சர்க்கரை, குங்குமப்பூ மற்றும் கேசரிபவுடர் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை நன்கு கிளற வேண்டும்.
  5. பின்பு அதில் நெய் ஊற்றி நன்றாக கிளற வேண்டும். பின்னர் இதனுடன் ஏலக்காய் பொடி, வறுத்து வைத்துள்ள முந்திரிப்பருப்பு மற்றும் கிஸ்மஸ் பழத்தை போட்டு சிறிது கிளறி இறக்க வேண்டும்.
  6. சுவையான சேமியா கேசரி (Semiya Kesari Recipe) ரெடி..!

Tamil Samayal Tips

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை info@tamilnalam.in என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…