Mutton Sukka Recipe

Mutton Sukka Recipe | ருசியான மட்டன் சுக்கா ரெசிபி

மட்டன் சுக்கா ரெசிபி(Mutton Sukka Recipe) குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மிகவும் அருமையாக இருக்கும் இந்த மட்டன் சுக்கா. இன்று இந்த மட்டன் சுக்கா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Tamil Samayal Tips

தேவையான பொருட்கள்
  1. மட்டன் எலும்பு எடுத்தது – 250 கிராம்
  2. சின்னவெங்காயம் – 300 கிராம்
  3. இஞ்சி, பூண்டு விழுது – 30 கிராம்
  4. சீரகத்தூள் – 25 கிராம்
  5. மிளகாய்த்தூள் – 25 கிராம்
  6. நல்லெண்ணெய் – 50 மில்லி.
  7. கொத்தமல்லித்தழை – சிறிதளவு
  8. கறிவேப்பிலை – சிறிதளவு
  9. காய்ந்த மிளகாய் – 2 எண்ணம்
  10. உப்பு – தேவையான அளவு

ருசியான கெண்டை மீன் வறுவல் ரெசிபி

ருசியான இறால் தொக்கு செய்வது எப்படி?

கேரளா ஸ்பெஷல் மீன் முளகிட்டது ரெசிபி!

செய்முறை
  • முதலில் மட்டனை நன்றாக சுத்தம் செய்து சின்னஞ்சிறிய அளவு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
  • சின்ன வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை பொடியாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.
  • பின்னர் சின்ன வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
  • வெங்காயம் வதங்கி நன்றாக பொன்னிறமாக வந்தவுடன் மட்டனையும், மிளகாய்த்தூளையும் சேர்த்து வதக்கி, அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைக்க வேண்டும்.
  • மட்டன் நன்றாக வெந்து தண்ணீர் முழுவதும் வற்றியவுடன், சீரகத்தூள் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து கலக்கி, கொத்தமல்லித்தழை போட்டு இறக்க வேண்டும்.
  • ருசியான மட்டன் சுக்கா ரெசிபி(Mutton Sukka Recipe) ரெடி.

அருமையான டெவில் சிக்கன் ரெசிபி

சுவையான நாட்டுக்கோழி மிளகு கூட்டு ரெசிபி.!

சுவையான செட்டிநாடு சிக்கன் குழம்பு

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை info@tamilnalam.in என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…