Kendai Meen Varuval Recipe

Kendai Meen Varuval Recipe | கெண்டை மீன் வறுவல் ரெசிபி

கெண்டை மீன் வறுவல் ரெசிபி(Kendai Meen Varuval Recipe)  பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய அசத்தலான உணவு. இந்த பதிவில் கெண்டை மீன் வறுவல் செய்வது எப்படி என தெரிந்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-
  • கெண்டை மீன் – கால் கிலோ
  • தேங்காய் துருவல் – அரை மூடி
  • புளி – தேவையான அளவு
  • வெங்காயம் – 2
  • பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன்
  • குழம்பு மிளகாய் தூள் – 4 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

ருசியான இறால் தொக்கு செய்வது எப்படி?

சுவையான கடம்பூர் போளி செய்வது எப்படி?

சுவையான நாட்டுக்கோழி மிளகு கூட்டு ரெசிபி.!

செய்முறை:-
  1. முதலில் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
  2. பின்னர் தேங்காய் துருவல், வெங்காயம் மற்றும் பெருஞ்சீரகம் ஆகிய மூன்றையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
  3. பின்பு மிக்சியில் அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் குழம்பு மிளகாய் தூள் போட்டு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
  4. பின்னர் தேவையான அளவு புளியை எடுத்து கரைத்து அதை அந்த கலவையுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  5. பின்பு வெட்டி வைத்த மீன் துண்டுகளுடன் தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கலந்து ஒருமணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
  6. எண்ணெய் சட்டியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அது நன்கு காய்ந்தவுடன் ஊறவைத்த மீன் துண்டுகளை போட்டு நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
  7. ருசியான கெண்டை மீன் வறுவல் ரெசிபி(Kendai Meen Varuval Recipe) ரெடி….

Tamil Samayal Tips

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை info@tamilnalam.in என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…