Home remedies for irregular period
Home remedies for irregular period | மாதவிலக்கு பிரச்சனை தீர பாட்டி வைத்தியம்

மாதவிலக்கு என்பது வயதுக்கு வந்த பெண்களுக்கு மாதம் ஒருமுறை நிகழும் இயற்கையான ஒரு நிகழ்வு. சில பெண்களுக்கு மாதவிலக்கு சரியாக ஏற்படும், ஒரு சில பெண்களுக்கு நாட்கள் முந்தும், ஒரு சில பெண்களுக்கு மாதவிலக்கு பிந்தும். சில பெண்களுக்கு வரைமுறை இல்லாமல் மாதவிலக்கு ஏற்படும். காலம் தவறி ஏற்படும் முறையற்ற மாதவிலக்கால் பெண்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். முறையற்ற மாதவிலக்கு பிரச்சனைக்குப் பாட்டி வைத்தியத்தில் பல்வேறு நாட்டுமருந்துகள்(Home remedies for irregular period) உள்ளன.

அந்த “மூன்று நாட்கள்” வயிற்றுவலி இன்றி கடக்க மருத்துவம்

மாதவிலக்கு வலி குறைய பாட்டி வைத்தியம்

மாதவிலக்கை தள்ளி போடும் இயற்கை வழிகள்

  1. முறையற்ற மாதவிலக்கு ஏற்படும் பெண்கள் கருஞ்சீரகம், கருப்பு எள் மற்றும் வெங்காயத்தாள் ஆகியவற்றை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து மாதவிலக்கு தடைப்பட்ட காலத்தில் காலை மற்றும் மாலை என இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டுவந்தால் சீரான மாதவிலக்கு(Uniform menstruation) ஏற்படும்
  2. விளா மரத்தினுடைய பிசினை எடுத்து அதனுடன் மஞ்சள் சேர்த்து நன்றாக ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல்(Leukorrhea) சரியாகும்.
  3. வாழைப்பூவை எடுத்து நன்றாக இடித்து சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்து வந்தால் வெள்ளைப்படுதல்(Leukorrhea) சரியாகும்.
  4. வல்லாரை கீரையைச் சாறு எடுத்து அந்த சாற்றுடன் பெருஞ்சீரகம் ஊறவைத்து உலர்த்தி பொடி செய்து தினசரி சிறிதளவு (2 கிராம்) சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனை சரியாகும்.
  5. மாதவிலக்கின் போது ஏற்படும் அதிக இரத்தபோக்கை(Excessive bleeding during menstruation) நிறுத்த இலவங்கப் பட்டையை நன்றாகப் பொடி செய்து தினசரி சிறிதளவு (2 கிராம்) சாப்பிட்டு வரலாம்.
  6. சரியான காலத்தில் மாதவிலக்கு வராதவர்கள் முள் இலவம் பட்டையை எடுத்து நன்றாக அரைத்துப் பொடி செய்து காலை மற்றும் மாலை என இருவேளைச் சிறிதளவு (5 கிராம்) சாப்பிட்டு வந்தால் சீரான மாதவிலக்கு ஏற்படும்.
  7. தினசரி உணவில் முருங்கை கீரையைச் சேர்த்து வந்தால் கருப்பையானது பலம் பெரும். மாதவிலக்கு பிரச்சனைகள் சரியாகும்.

பெண்கள் மாதவிலக்கு காலத்தில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள்

மாதவிலக்கு பிரச்சனை தீர இயற்கை வைத்தியம்..!!

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை info@tamilnalam.in என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…