Tips to grow Hair in Tamil
  1. வெந்தயத்தை நன்றாக அரைத்துத் தலையில் தடவிக் குளித்து வந்தால், தலை முடி பளபளப்பாகவும், அடர்த்தியாகவும், கறுப்பாகவும், மென்மையாகவும் வளரும்.
  2. வெந்தயத்தை சரியாக உணவில் சேர்த்துக் கொள்வதால் கூந்தல் ஆரோக்கியம் மேம்படுகிறது. தேங்காய் எண்ணெயில் சிறிதளவு வெந்தயத்தை ஊற வைத்து, தினமும் இரவில் அந்த எண்ணெயை தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்து காலையில் குளித்து வந்தால் கூந்தல் உதிர்வது கட்டுப்படும்.
  3. ஒரு பிடி அளவு வேப்பிலையை எடுத்து நீரில் நன்றாக வேக வைத்து ஒருநாள் கழித்து மீண்டும் வேக வைத்து, அந்த நீரைக் கொண்டு தலைமுடியை அலசி வந்தால், முடி கொட்டுவது நின்று விடும்.  மேலும் பேன் தொல்லை ஒழியும்.
  4. நரை முடிஉள்ளவர்கள், இயற்கையான முறையில் நரை முடியைக் கறுப்பாக்க அவுரி இலை மற்றும் மருதாணி இலை இரண்டையும் நன்றாக இடித்துத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டித் தலையில் தடவ வேண்டும். முடியின் நிறம் உடனே மாறுவதை காணலாம்.
  5. செவ்வந்திப்பூவை எண்ணெயில் கலந்து தடவி வந்தால் தலைமுடி நன்கு வளரும்.
  6. நரைமுடி மறைய, தினமும் வெண் தாமரைப்பூ கஷாயம் செய்து, அரை டம்ளர் வீதம் 40 நாள்கள் குடித்து வந்தால் நரைமுடி மறைந்து முடியின் நிறம் கருமையாக மாறும்.
  7. மருதாணி இலைகளை தேவையான அளவு பறித்து சுத்தம் செய்து, நன்றாக அரைத்து தலையில் தடவி இரண்டு மணி நேரம் கழித்து குளித்து வந்தால், தலைமுடி மிருதுவாகும். மேலும் உடல் சூடும் குறையும்.
  8. நெல்லி இலை மற்றும் இலந்தை இலை இரண்டையும் நன்றாக மையாக அரைத்து தலையில் தடவி பத்து நிமிடம் காயவிட்டுகுளித்து வந்தால், தலைமுடி நரைப்பது குறையும்.
  9. கேரட் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு இரண்டையும் கலந்து தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்து வந்தால் கூந்தல் நன்றாக செழித்து வளரும்.
  10. நெல்லிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், இள நரை கருமை நிறத்திற்கு மாறும். முடியும் செழுமை பெறும்.
  11. வாரத்திற்கு ஒருநாள் முளைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நரை நீங்கும். மேலும் முளைக்கீரையை நன்றாக உலர்த்திப் பொடி செய்து தினமும் அரை டீஸ்பூன் சாப்பிட்டு வந்தால் நரைமுடி மறையும்.
  12. செம்பருத்திப் பூக்களைப் பறித்து, அதன் காம்பை நீக்கி சுத்தம் செய்து தேங்காய் எண்ணெயில் கசக்கிப் போட்டு நன்றாக காய்ச்ச வேண்டும். நன்றாக ஆறிய பின்னர் பாட்டிலில் சேகரித்து தினமும் தடவி வந்தால் முடி நன்கு செழித்து வளரும். முடி உதிர்வதும் குறையும்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை info@tamilnalam.in என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…