இன்று பலருக்கும் முகத்தில் பல வித பிரச்சினைகள் உள்ளன. இதனை சரி செய்ய மக்கள் பணத்தை அதிக அளவில் செலவிடுகின்றனர். ஆனால் உங்கள் முகத்தை அழகு செய்ய வீட்டில் உள்ள பொருட்களே போதும். குறிப்பாக வீட்டில் உள்ள பழங்களே இதற்கு போதும் என அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் மாம்பழம் முகத்தை அழகு செய்ய சிறந்த முறையில் பயன்படுகிறது. மாம்பழத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தினால் முகத்தில் உள்ள சுருக்கங்கள், பருக்கள் மறையும் என்பதை பார்க்கலாம்.

மாம்பழம் என்ற வார்த்தையை கேட்டவுடன் நம் நினைவுக்கு வருவது ஒன்றே ஒன்றுதான். அது மாம்பழத்தின் சுவை மட்டும் தான். உண்மை தான்… மாம்பழம் அவ்வளவு ருசியாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களுக்கும் மாம்பழம் என்றால் அதிக பிரியம்.

முக அழகை மேம்படுத்தவும், பராமரிக்கவும் ஒரு சில முக்கிய பழங்கள் உதவும். அதில் மாம்பழம் முதல் இடத்தில் உள்ளது. மாம்பழத்தில் உள்ள சத்துக்களே முக அழகை பாதுகாக்கிறது. புரதசத்து, வைட்டமின் எ, வைட்டமின் பி6 ஃபோலேட், வைட்டமின் சி, நார்சத்து, நீர்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் மாம்பழத்தில் உள்ளது.

கருமையான முகம் வெண்மையாக மாற…

கருமையாக உள்ள உங்கள் முகம் வெண்மையாக மாற வேண்டும் என்றால், அதற்கு மாம்பழம் போதும். மாம்பழத்தில் உள்ள வைட்டமின் சி முகத்தை பொலிவாக மாற்றும். முகத்தை வெண்மையாக மாற்ற முதலில் மாம்பழத்தை நன்கு அரைத்து கொள்ள வேண்டும். அடுத்து அதன் சாற்றை யோகர்டுடன் கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக இவற்றுடன் முல்தானி மட்டியை சேர்த்து நன்கு கலந்து முகத்தில் பூசி மசாஜ் செய்து வந்தால் முகம் வெண்மையாக மாறும்.

கரும்புள்ளிகளை நீக்க…

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க ஒரு எளிய வழி உள்ளது. அதற்கு மாம்பழ சாற்றை தேனுடன் நன்கு கலந்து கொண்டு பிறகு இதனை முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். மேலும், முகம் பார்ப்பதற்கு மென்மையாக இருக்கும்.

சுருக்கங்கள் மறைய…

முகத்தின் இளைமையை கெடுப்பதே இந்த சுருக்கங்கள் தான். இது பலரின் முகத்தின் அழகை கெடுத்து வருகிறது. முதலில் முட்டையை உடைத்து, அதன் வெள்ளை கருவை தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு இதனை நன்கு அடித்து கொண்டு, அவற்றுடன் மாம்பழ சாற்றையும் சேர்க்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி மசாஜ் செய்து, வறண்ட பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் குறையும் மேலும் முகம் பொலிவு பெரும்.

மின்னுகிற முகத்தை பெற…

உங்கள் முகம் பளபளவென மின்ன வேண்டுமா..? அதற்காக இனி கிரீம்களை வாங்கி காசை செலவிடாதீர்கள். முதலில் மாம்பழ சாறுடன் தேனை நன்கு கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றை கோதுமை மாவில் சேர்த்து கலந்து கொண்டு, முகத்தில் பூசவும். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகம் மினுமினு என்று மின்னும். மேலும், சருமத்தின் பொலிவும் அதிகரிக்கும்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை info@tamilnalam.in என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…