Fenugreek Health Benefits

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள் | Health benefits of Fenugreek

தற்போது வெயில் காலம் தொடங்கிவிட்டது. கோடை வெயில் அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. இந்த வெயில் காலத்தில் பெரும்பாலான மக்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனை உடம்பு சூடு பிடித்தல் மற்றும் வயிற்று வலி. உடம்பு சூடு பிடிக்கும் போது சிறுநீர் கழிக்க சென்றால் அதீத எரிச்சல் ஏற்படும். மேலும் உடல் சூட்டால் வயிற்றுவலியும்(Stomach Pain) ஏற்படுகிறது.

1உடம்பு சூடு பிடித்தல்

உடம்பு சூடு பிடிப்பதில் இருந்து நிரந்தர தீர்வு தர வெந்தயம்(Fenugreek) உதவுகிறது. தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சிறிதளவு வெந்தயத்தை எடுத்து வாயில் போட்டு தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் காலையில் இவ்வாறு செய்து வந்தால் உடலின் வெப்பநிலை சீராக இருக்கும். மேலும் உடம்பு சூடு பிடிப்பதில் இருந்தும் தப்பிக்கலாம்.

2ஆண்மை குறைபாடு 

வெந்தயத்திற்கு பாலுணர்ச்சியை(Sexual Feeling) தூண்டும் ஆற்றல் உள்ளது. ஆண்கள் தொடர்ந்து வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரித்து நீண்ட நேரம் உடலுறவில் இன்பம் அனுபவிக்க உதவுகிறது.

விறைப்புத்தன்மை(Erection) பிரச்சனை மற்றும் விந்து விரைவில் வெளியேறும்(Sperm out quickly) பிரச்சனை உள்ள ஆண்களால் உடலுறவில் நன்றாக செயல்பட முடியாது. இத்தகைய பிரச்சனை உள்ள ஆண்கள் வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிறப்புறுப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து விறைப்புத்தன்மை மற்றும் விரைவில் விந்து வெளியேறும் பிரச்சனை சரியாகும். மேலும் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட உதவுகிறது.

3மார்பக வளர்ச்சி

பெண்கள் பலருக்கும் பெரிய மார்பகம்(Big breast) இருக்க வேண்டும் என்ற ஆசை கட்டாயம் இருக்கும். அதற்கு வெந்தயம் ஒரு நல்ல தீர்வு. மார்பக அளவை பெரிதாக்க நினைக்கும் பெண்கள் தினமும் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் இயற்கையாகவே அவர்களின்  மார்பக அளவு பெரிதாகும்.

4கொலஸ்ட்ரால்

வெந்தயமானது நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தய பொடியை நீரில் கரைத்து குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் நீங்கி உடல் சுறுசுறுப்பு பெரும்.

5இதய நோய் 

வெந்தயத்தில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகளவு உள்ளது. இதனால் இதய நோய் (Heart attack) ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. நமது உடலில் உள்ள அதிகளவு கெட்ட கொழுப்புகள் இதய நோய்க்கு வழிவகுக்கும். வெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைப்பதால் இதய நோய்(Heart attack) வரும் வாய்ப்பு மிகவும் குறைவு.

6சர்க்கரை நோய் 

இன்சுலின் உற்பத்தியை தூண்டும் அமினோ அமிலம் வெந்தயத்தில் அதிகளவு உள்ளது. சர்க்கரை நோயால்(Diabetes) பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில்  சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

7மலச்சிக்கல் 

வெந்தயத்தில் கரையும் நார்ச்சத்து உள்ளது. மலச்சிக்கல்(Constipation) பிரச்சனை உள்ளவர்கள் தினமும் காலை வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மலசிக்கல் பிரச்சனையில் இருந்து தீர்வு பெறலாம்.

8செரிமான பிரச்சனை

வெந்தயத்தில் கால்சியம், புரோடீன், இரும்புச்சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் கனிம சத்துக்கள் அதிகளவு உள்ளது. செரிமான பிரச்சனை(Digestive problem) உள்ளவர்கள் வெந்தயம் சாப்பிட்டு வந்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.

செரிமான குறைபாடு மற்றும் வயிற்றுப்புண்(Ulcer) பிரச்சனை உள்ளவர்கள் இரவில் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலை அந்த நீரை குடிக்கலாம் அல்லது தினமும் காலை வெறும் வயிற்றில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடித்து வரலாம்.

9உடல் எடை குறைப்பு

உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் வெந்தயத்தை சாப்பிட்டு வரலாம். வெந்தயத்திற்கு உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உள்ளது. வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்தானது அடிக்கடி பசி ஏற்படுவதை தடுத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

10சிறுநீரக பிரச்சனை 

சிறுநீரக கற்களால்(Kidney stones) கடுமையான வலியை சந்தித்து வருபவர்களுக்கு வெந்தயம் ஒரு நல்ல தீர்வு. சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் தினமும் வெந்தயம் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் சேரும் நச்சுக்கள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படும்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை info@tamilnalam.in என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…