உடல் எடையை குறைக்க பல வகையான முயற்சிகளையும், ஏராளமான மருந்துகளையும், உடற்பயிற்சிகளையும் செய்து சோர்வடைந்தவர்களுக்கான தீர்வு இது. இது போன்ற நிலையை தவிர்க்க இயற்கை ஆயுர்வேதம் உதவுகிறது. ஆயுர்வேதத்தில் சொல்லப்படும் வழிமுறைகள் உடல் பருமனை ஒரே மாதத்தில் குறைக்க உதவுகிறது. இந்த வழிமுறைகளை தொடர்ந்து செய்து வந்தாலே உடல் எடையை எளிதில் குறைக்கலாம். உடல் பருமன், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் ஆகியவற்றை குறைக்கலாம்.

இன்று உடல் பருமனால் பாதிக்கப்படும் பெரும்பாலானோரின் முக்கிய காரணமாக இருப்பது, உடலில் சேர கூடிய கெட்ட கொழுப்புக்கள் தான். ஒருவரின் உடலில் LDL எனப்படும் கெட்ட கொழுப்புகள் அதிகமாகி விட்டால் உடல் எடைவேகமாக ஏறி கொண்டே போகும். எனவே, இவற்றை உடனே கரைக்க கூடிய ஆயர்வேத வழி முறைகளை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

1மாதுளை மற்றும் கிரேப்புரூட்

மாதுளை மற்றும் கிரேப்புரூட் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக அரைத்து, பிறகு அதனை வடிகட்டி, அந்த சாற்றுடன் தேன் மற்றும் உப்பு கலந்து குடிக்கலாம். இது தொப்பையை குறைக்க உதவுகிறது. மேலும் அடி வயிற்றில் கொழுப்புகள் சேராமலும் பார்த்து கொள்ளும்.

2ஆளி விதை காஃபி

உடல் எடையை குறைக்க உதவும் ஆயர்வேத முறையில் இது முதன்மையான இடத்தை பிடித்துள்ளது. சூடான நீரில் 1 ஸ்பூன் காபியை கலந்து அதனுடன் 1 ஸ்பூன் ஆளி விதை மற்றும் டார்க் சோகோலட் சேர்த்து நன்றாக கலந்து வடிகட்டி குடிக்கவும். தினமும் காலையில் இந்த காபியை குடித்து வந்தால் ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்கலாம்.

3வெந்தயமும் வெள்ளரியும்

வெந்தயம் என்பது பொதுவாகவே நல்ல மருந்து. உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைத்து கொள்ள வெந்தயம் உதவுகிறது. அதே போன்று வெள்ளரிகாயும் உடலின் உள்ள கெட்ட கொழுப்புக்களை விரட்டி அடிக்க உதவுகிறது.

இரவு முழுவதும் வெந்தயத்தை 1/2 கப் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் இதனுடன் வெள்ளரிக்காயை சேர்த்து நன்றாக அரைத்து பின்பு இதனை வடிகட்டி சிறிது உப்பு சேர்த்து குடிக்க வேண்டும். செரிமான கோளாறை முற்றிலுமாக குணப்படுத்துவதில் இது முதல் இடத்தில் உள்ளது. மேலும் ரத்தம் உறைவதை தடுத்து, சீரான உடல் எடையை தருகிறது.

4இளநீரும் அண்ணாச்சியும்

அண்ணாச்சி பழத்தை நன்கு அரைத்து அதனுடன் இளநீர், கருஞ்சீரகம் சேர்த்து மீண்டும் அரைத்து, பின்பு அதனை வடிகட்டி சிறிது உப்பை சேர்த்து தொடர்ந்து குடித்து வரவேண்டும். இவ்வாறு செய்தால் உடலில் உள்ள கேட்ட கொழுப்புகள் நீங்கி உடல் பருமனை குறைக்கலாம்.

5தக்காளி ஜூஸ்

அடி வயிற்றில் உள்ள கொழுப்பு மற்றும் உடலில் தேவைக்கு அதிகமாக சேர்ந்துள்ள கொழுப்புக்களை குறைக்க இந்த முறை பயன்படுகிறது. முதலில் 1 கப் தக்காளியை நன்கு அரைத்து பின்பு அதனை வடிகட்டி 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வரவும். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும். மேலும், கொழுப்பை சட்டென கரைக்க உதவுகிறது.

6பப்பாளியும் இலவங்கமும்

பப்பாளி ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் உடலில் சர்க்கரையின் அளவை சமமான அளவில்  வைத்து கொள்ள பயன்படுகிறது. பப்பாளியை நன்றாக அரைத்து அதனை  வடிகட்டி, உப்பு மற்றும் இலவங்க பொடியை சேர்த்து நன்கு கலந்து குடிக்க வேண்டும். இதை தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.

7கிரீன் டீ

உடலின் கொழுப்பை விரைவில் கரைக்க கிரீன் டீ உதவுகிறது. கிரீன் டீ இலைகள் மற்றும் புதினாவை நீரில் கொதிக்க விட்டு, வடிகட்டி குடிக்க வேண்டும். சுவைக்கு சிறிது தேனும் சேர்த்து கொள்ளலாம்.

8எலுமிச்சை டீ

நீரை நன்றாக கொதிக்க விட்டு, பிறகு அவற்றில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொண்டு குடிக்கலாம். இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும், உடலில் உள்ள கேட்ட கொழுப்புகளை முற்றிலுமாக கரைக்கும் ஆற்றல் பெற்றது.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை info@tamilnalam.in என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…