தற்போது பெரும்பாலான மக்களை வாட்டிவதைக்கும் மிகப்பெரும் பிரச்சனை உடல் பருமன் தான். இதற்கு காரணம் மக்களின் மாறி வரும் உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தான். உண்ணும் உணவு மற்றும் உடல் மீது முதலில் அக்கறை இல்லாமல் இருந்துவிட்டு உடல் எடை அதிகரித்த பின்னர் ஜிம் மற்றும் மருத்துவமனைக்கு செல்கின்றனர்.

ஒரு சில விஷயங்களில் கட்டுப்பாட்டுடனும், அக்கறையோடும் இருந்தால் ஜிம்முக்கு போகாமலே மருத்துவரை நாடாமலே உடல் எடையை குறைக்கலாம். இந்த பதிவில் நறுக்குன்னு சொல்லப்பட்ட 10 குறிப்புகளை பின்பற்றினாலே போதும், உடல் எடையை விரைவில் குறைக்கலாம்.

1சர்க்கரை

உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம் சர்க்கரை தான். எனவே கூடியமட்டும் சர்க்கரையை தவிர்க்க வேண்டும். பால் மற்றும் டி போன்றவற்றில் மட்டும் தவிர்த்தால் போதாது. ஸ்வீட்ஸ் மற்றும் சாக்லேட் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். இதனால் உடல் எடை அதிகரிக்காமல் குறைக்கவும் முடியும்.

2எலுமிச்சை + தண்ணீர்

தினமும் காலை வெறும் வயிற்றில் எலுமிச்சம்பழத்தைமிதமான சூட்டில் நீரில் கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறையும் மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனுடன் சிறிது தேன் கலந்தும் குடிக்கலாம்.

3உடற்பயிற்சிகள்

வீட்டில் இருந்தபடியே சின்னஞ்சிறு உடற்பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் உடல் எடையை குறைத்து, உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்கலாம்.

4சாப்பாடு

நாம் சாப்பிடும் போது சாப்பிடும் சாப்பாட்டில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும். மொபைல் பயன்படுத்திக்கொண்டோ அல்லது டிவி பார்த்துக்கொண்டோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் சாப்பிடும் சாப்பாட்டின் அளவு தெரியாமல் சாப்பிட்டு அதனால் உடல் எடை அதிகரிக்கும்.

5தண்ணீர்

நமது உடல் சீராக செயல்பட தண்ணீர் மிகவும் அவசியம். தினமும் 3 முதல் 5 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் நிறைய குடிப்பதால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இதனால் உடல் புத்துணர்ச்சியோடு ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இதனால் உடல் எடையும் குறையும்.

6காய்கறிகள்

சீஸ் மற்றும் பட்டர் போன்ற கொழுப்புசத்து அதிகம் உள்ள உணவுப்பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்வதை குறைக்க வேண்டும். அதற்கு பதிலாக உணவில் காய்கறிகளை அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். கூடவே பழவகைகளையும்  அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் உடல் ஆரோக்கியமாகவும் எடை அதிகரிக்காமலும் பார்த்துக்கொள்ளலாம்.

7பொறித்த உணவுகள்

எண்ணையில் பொறித்த உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். உதாரணமாக பஜ்ஜி, சிக்கன் 65, போண்டா போன்ற உணவுகளை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். எண்ணெய் உணவுகளும் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம்.

8தூக்கம்

தினமும் 8 மணி நேரம் தூக்கம் என்பது அவசியமான ஒன்று. சரியாக தூக்கம் இல்லாமல் இருந்தால் மனசோர்வு ஏற்படும். இதனால் வேலைகளில் கவனம் செலுத்த இயலாது. தூக்கம் இல்லாமல் ஓவர் டைம் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். அதற்காக நீண்ட நேரமும் தூங்க கூடாது.

9நடைப்பயிற்சி

தினமும் காலை அரை மணி நேரம் முதல் முக்கால் மணி நேரம் கட்டாயம் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதனால் உடல் எடையை விரைவில் நன்றாக குறைக்கலாம். மேலும் இரவு உணவு சாப்பிட்ட பின்னர் 10 நிமிடமாவது சிறிது தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

10லிப்ட்

தற்போது பெரும்பாலான மக்கள் கார் மற்றும் ஏசி பேருந்துகளில் தான் பயணம் மேற்கொள்ளகின்றனர். இதனால் உடலில் உள்ள வியர்வை வெளியேறாமல் இருக்கும். எனவே அலுவலகம் சென்றால் லிப்ட் பயன்படுத்தாமல் படிக்கட்டுகளை பயன்படுத்த பழக வேண்டும். முதலில் கடினமாக இருந்தாலும் உடலுக்கு மிகவும் நல்லது.

English Summary:

Obesity is the biggest problem for most people right now. This is because of the changing habits of people and their way of life. If you are in control and concerned with a few things, you can lose weight without going to the gym without seeking a doctor.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை info@tamilnalam.in என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்… உங்களின் கருத்துக்களை மறக்காமல் கமெண்டில் தெரிவியுங்கள்.