குழந்தைகள் பெற்ற அனைவருக்கும் இருக்கும் கவலை குழந்தைக்கு உடல்நிலை சரி இல்லாமல் போனால் என்ன செய்வது என்பதுதான். குறிப்பாக வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லை என்றால் பயமும், கவலையும் இரட்டிப்பாகிவிடும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் என்பது முழுமையாய் வளர்ச்சியடைந்திருக்காது. எனவே கிருமிகள் அவர்களை எளிதில் தாக்கக்கூடும்.

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படக் கூடிய நோய்களில் ஒன்று வயிறு வலியாகும். குழந்தை ஏன் அழுகின்றது என்று கண்டறிவதிலியே பெரும்பாலும் நேரம் கடந்துவிடும். இத்தகைய சூழ்நிலையில் வயிறு வலி வரும்போதெல்லாம் அவர்களை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு செல்ல இயலாது. எனவே சில எளிய வீட்டு மருத்துவங்களை தெரிந்து வைத்துக்கொள்வது என்பது நல்லது.

1செவ்வந்தி பூ டீ

இதை கேட்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கலாம், ஆனால் இது மிகவும் பலன் தரக்கூடிய வீட்டு வைத்தியமாகும். சிறிதளவு செவ்வந்தி இதழ்களை எடுத்துக்கொண்டு அதில் கொதிக்கும் நீரை ஊற்றி மூடிவைக்கவும். 15 நிமிடங்களுக்கு பிறகு இதனை ஆறவைத்து குழந்தைக்கு கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்தால் விரைவில் நல்ல பயன் கிடைக்கும். ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் இதனை குழந்தைக்கு கொடுக்கக்கூடாது.

2புதினா டீ

இதை தயாரிக்கும் முறை செவ்வந்தி பூ டீ போல்தான். புதினாவில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பலன் தரக்கூடியது. புதினா இலைகளை சுடுதண்ணீரில் போட்டு சிறிது நேரம் கழித்து வடிகட்டிவிட்டு அந்த நீரை குழந்தைக்கு கொடுக்கலாம். தாய்ப்பால் கொடுக்கும் தாயாக இருப்பின் அவரும் குடிக்கலாம்.

3மசாஜ்

இது மிகவும் எளிதான முறையாகும். குழந்தை அழும்போது சிலசமயம் காற்றையும் சேர்த்து உள்ளே இழுத்துவிடுவார்கள், அதனால்கூட வயிற்றுவலி ஏற்படலாம். எனவே வயிறை மெதுவாக அழுத்திவிடவும். மேலும் காலை வயிறை நோக்கி அசைக்கவும். இல்லையெனில் சுடுநீரில் குழந்தையின் வயிறு நன்கு நனையும்படி குளிப்பாட்டலாம்.

4ஜீரண நீர்(க்ரேப் வாட்டர்)

இது நாம் மிகவும் அறிந்த ஒன்று. குழந்தைக்கு வயிற்று வலி சில சமயம் அஜீரணத்தால் கூட ஏற்படலாம். அதுபோன்ற சமயத்தில் ஜீரண நீர் கொடுப்பது உடனடி தீர்வு தரும். எனவே வீட்டில் எப்பொழுதும் க்ரேப் வாட்டர் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

5மிளகு

மிளகு என்பது சமையலுக்கு மட்டுமின்றி பழங்காலம் முதலே மருத்துவத்திலும் பயன்படுத்தபட்டு வருகிறது. மிளகை தூளாக நுணுக்கி அதை சுடுநீரில் போட்டு குழந்தைக்கு கொடுக்கலாம். சில குழந்தைகளுக்கு மிளகு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம், எனவே குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படுகிறதா என்பதை உறுதிசெய்துகொண்டு இதனை தொடரலாம்.

உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை info@tamilnalam.in என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள். தமிழ் நலம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற இங்கே கிளிக் செய்யவும்…